தேர்தல் ஆணையத்தை அதிரவைத்த ஜனாதிபதி.

திசைகாட்டி உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு கண்மூடித்தனமாக நிதி! மற்றவர்களுக்கு இல்லை என தொடரும் பேச்சு! சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்!

வரவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வீ.பி – திசைகாட்டி ) கட்டுப்பாட்டின் கீழ் வரும் சபைகளுக்கு மத்திய அரசு கண்மூடித்தனமாக நிதி வழங்கும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு வெளியே உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்போது, அவர்களின் வரலாறு சுத்தமாக இல்லாததால் பத்து முறைக்கு மேல் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மன்னார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்திலும் ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார். ஏற்கனவே பல இடங்களில் தெரிவித்த இக்கருத்து எதிர்தரப்பினரது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க கூறுகையில், ஜனாதிபதியின் இந்த கருத்து தொடர்பாக ஏற்கனவே பல புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தில் ஏப்ரல் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.

ஜனாதிபதியின் இந்த கருத்து, தேர்தல் நியதிகளுக்கு எதிராக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது, தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.