நெல்லை இருட்​டுக்​கடையை கணவர் வீட்​டார் வரதட்​சணை​யாக கேட்பதாக மணப்பெண் புகார்

நெல்லை இருட்​டுக்​கடையை கணவர் வீட்​டார் வரதட்​சணை​யாக கேட்பதாக மணப்பெண் புகார் அளித்துள்ளார்.

நெல்லையில் ‘இருட்டுக்கடை’ என்ற அல்வா கடை பிரபலமாக உள்ளது. இந்த கடையை ஹரிசிங், கவிதா தம்பதியினர் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஸ்ரீகனிஷ்கா உள்ளார்.

இந்நிலையில், கணவர் வீட்டார் இருட்​டுக்​கடையை வரதட்​சணை​யாக கேட்டு மிரட்டல் விடுப்பதாக ஸ்ரீகனிஷ்கா நெல்லை காவல் ஆணை​யரிடம் புகார் மனு அளித்​திருந்​தார்.

இது தொடர்பாக கவிதா ஹரிசிங் கூறுகையில், “எனது மகளுக்கும் கோவையைச் சேர்ந்த பல்​ராம்​சிங் என்பவருக்​கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் எனது மகளிடம் வரதட்சணை கேட்டு மிரட்டுகின்றனர்.

ரூ.1.5 கோடி மதிப்​புள்ள கார் வேண்​டுமென்​றும் கேட்டதால் நாங்கள் புக் செய்து வைத்திருந்தோம். மேலும், எனது மகளின் கணவர் பல்​ராம்​சிங் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் எனது மகள் வேதனையில் கடந்த மார்ச் 15-ம் ​திகதி அன்று கோவையி​லிருந்து நெல்​லைக்கு வந்​து விட்டார். மேலும், எனது மகள் வாழ வேண்டும் என்றால் இருட்​டுக்கடை அல்வா உரிமத்தை பல்​ராம்​சிங் பெயரில் எழு​தித்தர வேண்​டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்” என்றார்.

ஆனால், இவர்களின் கருத்துக்கு கோவை​யில் பல்​ராமின் தந்தை யுவ​ராஜ்சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.