சிலாபம் கடற்கரையில் வயோதிபரின் சடலம் மீட்பு!

புத்தளம் – சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரைப் பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

5 அடி 4 அங்குலம் உயரமுடைய வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வயோதிபரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.