மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு – பெண் உட்பட இருவர் படுகாயம்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து கேகாலையில் மாவனெல்லை – ஹெம்மாத்தகம வீதியில் இடம்பெற்றுள்ளது என்று மாவனெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த நாய் மீது மோதி கவிழ்ந்து பெண் பாதசாரி மீது மோதி பின்னர் அருகிலிருந்த கொங்கிரீட் கல்லில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் வீதியில் பயணித்த பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.