திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது.
கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர் ஜோசப்(69). இவரது அண்டை வீட்டார் ஷிஜோ(42). வீட்டின் முற்றத்தில் நாய் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்த நிலையில் இவ்விவகாரத்தில் சனிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே, அது சண்டையாக மாறியது.
அப்போது ஜோசப், ஷிஜோவை குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட ஜோசப் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் வெள்ளம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு!
விசாரணை நடவடிக்கைகள் நடந்து வருவதால் அவரது கைது இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
நாயால் அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருப்பது திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.