புதுடில்லியில் சரிந்து விழுந்த கட்டடம் – மீட்புப்பணி தீவிரம்.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சரிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் தேடல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
11 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. அந்த 3 மாடிக் கட்டடம் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 மணிக்கு இடிந்துவிழுந்தது.
சுற்றியுள்ள வட்டாரத்தில் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருக்கின்றனர்.
20 ஆண்டுப் பழமையான கட்டடத்தின் சிதைவுகளில் அவசரகாலப் பணிக்குழுக்கள் தேடல் பணிகளை மேற்கொள்கின்றன.
இதுவரை 11 பேர் காப்பாற்றப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இதற்கிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் X சமூக ஊடகத் தளத்தில் அதுகுறித்துப் பதிவிட்டார்.
இறந்தோரின் அன்புக்குரியவர்களுக்கு இரங்கல் தெரிவித்த திரு மோடி ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கும் 200,000 ரூபாய் நிதியுதவி வழங்குவதாகத் தெரிவித்தார்.