ஈஸ்டர் தாக்குதலின் பெரும் இரகசியத்தின் ஒரு பகுதியை அம்பலப்படுத்திய பிமல் .. பிள்ளையானின் தொடர்பும் வெளிச்சத்திற்கு …

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளுக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கும் தொடர்பு இருப்பதாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் அரசாங்கத்துடன் தொடர்புடைய சில நிறுவனங்களின் உயர்மட்ட பங்களிப்புடன் இடம்பெற்றுள்ளது என்பது தற்போது தெளிவாகி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த தாக்குதல் தொடர்பில் சந்தேகம் உள்ள குழுக்கள் அந்த தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் ஆட்சி அதிகாரத்தையும் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், அந்த தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை அழிக்கவும் மறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடந்த இரண்டு வாரங்களில் வெளிவந்த விசேட புதிய தகவல்கள் மூலம் ஈஸ்டர் தாக்குதலை வழிநடத்தியவர்களை வெளிப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயங்களை குறிப்பிட்டார்.