அநுர அணியினர் எல் போர்ட் காரர்கள் – ரணில் கடும் விமர்சனம்.

“நாடாளுமன்றத் தேர்தலின்போது எல் போர்ட் காரர்களைத் தெரிவு செய்ய வேண்டாம் எனவும், அனுபவம் மிக்கவர்களைச் சபைக்கு அனுப்புமாறும் கோரினேன். எனினும், எல் போர்ட் காரர்கள் சபைக்கு வந்தனர். இன்று வாகனத்தைச் சேதப்படுத்திவிட்டனர். வாகனத்தில் எடுப்பதற்கு ஒன்றும் இல்லை.” – என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மைப் பலம் கிடைக்கப்போவதில்லை. எனவே, பெரும்பான்மையைப் பெறுவதற்கு எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். பெரும்பான்மைப் பலம் இருந்தால்தான் சபைத் தலைவரைத் தெரிவு செய்ய முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
எனவே, நாம் எவருடனும் மோதத் தேவையில்லை. பெரும்பான்மையைப் பெறுவதற்கு முயற்சிப்போம் என்றும் ரணில் கூறினார்.