சென்னையில் புதிதாக 3 பேருக்கு கரோனா பாதிப்பு!

சென்னையில் புதிதாக 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சென்னையில் ஒரு பெண் உள்பட 3 பேருக்கு நேற்று (ஏப்.21) கரோனா உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இது ஒரு பிரச்னை இல்லை; அதனால் மக்கள் பதட்டமடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஏப்.20 ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புகள் எதுவுமில்லை எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பினால் சுமார் 32 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.