போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு ஏப்ரல் 26 : பெறுமதியற்ற மரப் பெட்டியில் உடல் அடக்கம்.

போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை (26 ஏப்ரல்) நடைபெறவுள்ளது.
வத்திகன் சிட்டியில் உள்ள St. Peter’s Basilica தேவாலயத்திற்கு வெளியே இறுதிச்சடங்கு நிகழவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிச்சடங்கின் முடிவில் இறுதிப் பிரார்த்தனை நடைபெறும்.
பிறகு அவருடைய நல்லுடல் செயின்ட் மேரி மேஜர் (St Mary Major) எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இதற்கிடையில் போப் பிரான்சிஸின் நல்லுடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் படங்களை வத்திகன் வெளியிட்டுள்ளது.
அவர் போப்பாக இருந்த காலத்தில் அவர் 12 ஆண்டுகள் வசித்த வீட்டில் அவருடைய நல்லுடல் வைக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாகக் கத்தோலிக்கச் சமயத் தலைவர்களின் இறுதிச் சடங்கு மிகவும் பாரம்பரியமாகவும் விரிவாகவும் நடைபெறும்.
ஆனால் தாம் மறைந்தபிறகு நடைபெறும் இறுதிச்சடங்கு மிகவும் எளிமையாக இருக்கவேண்டும் என்று அவர் ஏற்கனவே கேட்டுக்கொண்டதாக BBC செய்தி கூறுகிறது.
இதற்குமுன்னர் கத்தோலிக்கச் சமயத் தலைவர்கள் சைப்ரஸ், ஓக் மரக்கட்டைகளால் தயாரிக்கப்பட்ட 3 அடுக்குப் பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால் தமது உடல் துத்தநாகம் பூசப்பட்ட எளிய மரப் பெட்டியில் அடக்கம் செய்யப்படவேண்டும் என்று அவர் ஏற்கனவே குறித்துவைத்துவிட்டதாக BBC செய்தி கூறுகிறது.
பொதுமக்களின் பார்வைக்காகத் தமது நல்லுடலை St Peter’s தேவாலயத்தில் உயரமான இடத்தில் வைக்கும் பாரம்பரியத்தையும் அவர் அகற்றினார்.
அதற்குப் பதிலாக சவப்பெட்டிக்குள் தமது உடல் இருக்கும்போது அதன் மூடி அகற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நூறாண்டுக்கு மேலாக வத்திகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் ஆவார்.
ரோமிலுள்ள St Mary Major தேவாலயத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.