டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் நாணய சுழற்ச்சியில் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அபிஷேக் போரல் 51 ரன்களும், கருண் நாயர் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல் மற்றும் படேல் சிறப்பாக ஆடினர்.
ராகுல் 42 பந்துகளில் 57 ரன்களும், படேல் 20 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர். இறுதியில் டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.