பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிரிழந்த உள்ளூா் முஸ்லிம் இளைஞா்!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு இந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது.
கோடைக்காலத்தில் இந்த பகுதிக்கு, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
பஹல்காம் தாக்குதல்
இது போல், நேற்று சுற்றுலா வந்துள்ள பயணிகள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, பயங்கரவாதிகள் மதம் பார்த்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்து என உறுதிப்படுத்திய பின்னர் துப்பாக்கியால் சுட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், இந்த தாக்குதலில் இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமிய தொழிலாளி
சையது அடில் ஹுசைன் ஷா(syed adil hussain shah) என்ற உள்ளூர் குதிரை சவாரி தொழிலாளி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் சுடப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தங்களை நம்பி வந்தவர்களை காப்பாற்ற நினைத்த அவர், தைரியாக சென்று பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.
ஆனால் பயங்கரவாதிகள் அவரையும் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகளை தவிர்த்து கொல்லப்பட்ட ஒரே உள்ளூர் நபர் இவர்தான்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஹுசைன் ஷாவின் வருமானத்தை நம்பியே இருந்த அவரது வயதான தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
தவிக்கும் குடும்பம்
இது குறித்து பேசிய ஹுசைன் ஷாவின் தந்தை சையது ஹைதர், “நேற்று எனது மகன் வழக்கம்போல் பஹல்காமிற்கு வேளைக்கு சென்றான். 3 மணிக்கு தாக்குதல் குறித்துக் எங்களுக்கு தகவல் வந்தது.
அப்போது அவனுக்கு அழைத்த போது அவனின் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மாலை 4.40 மணிக்கு, போன் ஆன் செய்யப்பட்டது. ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை.
அதன் பின்னர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்றோம். அப்போதுதான்பயங்கரவாத தாக்குதலில் என் மகன் கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கப்பெற வேண்டும்.” என கூறினார்.
குதிரை சவாரியில் அவர் ஈட்டும் வருமானத்தில் தான் எங்களின் காலம் நகர்ந்துக்கொண்டிருந்தது. இப்போது எங்களை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. அவன் இல்லாமல் இனி நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என தெரியவில்லை.” என அவரது தாய் கண்ணீர் மல்க கூறினார்.
ஆண்ட்ரியா
சையது அடில் ஹுசைன் ஷாவின் இறுதி சடங்கில், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேசிய உமர் அப்துல்லா, “நம்முடைய மாநிலத்தை சுற்றிப்பார்க்க வந்த விருந்தினர்கள், கெடு வாய்ப்பாக சவப்பெட்டிகளில் அனுப்பப்பட்டுள்ளனர்.
தன்னுடைய வாழ்க்கைய சிரமத்திற்கு இடையே நடத்தி வந்த ஷாவின் உடல் சவப்பெட்டியில் வந்துள்ளது. வாழ்க்கை எப்படி இருந்தாலும் அவரது இறப்பு சாதாரணமானதாக இல்லை. துணிச்சலுடன், தாக்குதலை தடுக்க முயற்சித்திருக்கிறார். அவரது குடும்பத்தை நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம்” என கூறினார்.
View this post on Instagram
நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவும், “நமது நாடு மத ரீதியாக அதிகம் பிரிந்து அணி திரட்டப்படும் ஒரு சூழலில் ஒரு குறிப்பிட்ட மதம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பை திசை திருப்பாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை என பஹல்காம் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.