மாத்தறை சிறைக்கைதிகள் அகுணகொலபெலஸ்ஸவுக்கு மாற்றம்.

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தற்போது அகுணகொலபெலஸ்ஸ உள்ளிட்ட அருகிலுள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று அந்த சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் கைதிகளின் அதிக நெரிசல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று நள்ளிரவு இரண்டாவது முறையாக ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நேற்று இரவு சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக சுமார் 150 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு அமைதியின்றி நடந்துகொண்ட கைதிகளை மீண்டும் வார்டுகளுக்குள் விரட்டுவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொண்டனர்.

அந்த சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கு தீர்வு காண்பதற்காக சிறைச்சாலை தலைமையகத்தின் அதிகாரிகளின் குழுவொன்றும் நேற்று இரவே மாத்தறை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள “மிதிகம பால மாமா” மற்றும் மேலும் இரு சந்தேக நபர்களை வேறு மூன்று சிறைச்சாலைகளுக்கு மாற்ற சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தமையே அந்த சிறைச்சாலையின் கைதிகள் அமைதியின்றி நடந்துகொள்ள காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.