சீனாவுடன் உடன்பாடு: வரி குறைக்க வாய்ப்பு – டிரம்ப்

அமெரிக்கா – சீனா வர்த்தகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், சீனப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், வரிகள் முழுமையாக நீக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
இரு நாடுகளும் நல்லிணக்கத்துடன் செயல்பட்டால், வரிகள் குறைக்கப்படும் என்றும், கொரோனா வைரஸ் குறித்து சீன அதிபர் சி ஜின்பிங்குடன் பேசப்போவதில்லை என்றும் டிரம்ப் கூறினார்.
சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருப்பது, சீன அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. டிரம்ப் அறிவித்த புதிய வரிகளால் அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் கருவூலங்கள் ஆட்டம் கண்டன.
சீன இறக்குமதிகள் மீது 145% வரி விதிக்கப்பட்டிருந்தாலும், கணினி மற்றும் சில மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா விரும்பினால், மிரட்டலை நிறுத்த வேண்டும் என்று சீனா கூறியுள்ளது. சமத்துவம் மற்றும் மரியாதையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாகவும், ஆனால் அமெரிக்கா நெருக்கடி தந்தால் இறுதி வரை போராடவும் தயார் என்றும் சீனா எச்சரித்துள்ளது.