டான் கொலை: முக்கிய சந்தேகநபர் கைது – மனைவியின் சகோதரியும் கைது.

சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேற்கு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பாக இதுவரை ஏழு பேர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பெண்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட ஒரு பெண் டான் பிரியசாத்தின் மனைவியின் சகோதரி ஆவார்.