தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக இம்மாதம் 24, 25, 28, 29 ஆகிய திகதிகளைத் தேர்தல் ஆணைக்குழு ஒதுக்கியுள்ளது.
அதற்கமைய இன்று காலை 8.30 மணிக்குத் தபால் மூல வாக்களிப்புச் செயற்பாடுகள் சுமுகமாக ஆரம்பமாகின.
தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்புச் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகின.
இந்த வருடம் 6 இலட்சத்து 48 ஆயிரத்து 495 விண்ணப்பதாரர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.