சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அம்பலவன் பொக்கணை கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக பெரண்டினா நிறுவனத்தின் அனுசரணையுடன் அம்பலவன் பொக்கணை மாதர் அபிவிருத்தி சங்கம் ஊடாக குறித்த கிராம மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் விநியோகத்திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று(26) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த குடிநீர் திட்டத்திற்கான கட்டிடம் அமைப்பதற்காக புலம்பெயர்ந்து லண்டன் நாட்டில் வாழ்கின்ற வரதேஸ்வரன் நதியா என்பவர் 4 இலட்சம் ரூபா நிதி பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
குறித்த குடிநீர் சுத்திகரிப்புக்கான இயந்திர தொகுதிகளுக்காக பெரண்டினா நிறுவனம் 16 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை பொருத்தி இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் இ.கஜுதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா, பெரண்டினா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.