ராஜஸ்தானை வீழ்த்தியது ஆர்சிபி!

ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்ச்சியில் வென்ற
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ஓட்டங்களை குவித்தது.
விராட் கோலி 42 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ஓட்டங்களை விளாசினார். தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து 50 ஓட்டங்களை பெற்று அவுட்டானார். பில் சால்ட் 26 ஓட்டமும்,டிம் டேவிட் 23 ஓட்டமும், ஜிதேஷ் சர்மா 20 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதையடுத்து, 206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார். அரை சதம் கடப்பார் என எதிர்பார்த்த நிலையில் 19 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 49 ஓட்டங்களை பெற்று அவுட்டானார்.
நிதிஷ் ரானா 28 ஓட்டமும், ரியான் பராக் 22 ஓட்டங்களையும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் துருவ் ஜூரல் அதிரடி காட்டினார். அவர் 34 பந்தில் 47 ஓட்டங்களை எடுத்து அவுட்டானார்
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 194 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி திரில் வெற்றி பெற்றது. இது ஆர்சிபி அணியின் 6வதுவெற்றி ஆகும். ராஜஸ்தான் அணியின் 7வது தோல்வி இதுவாகும்.
ஆர்சிபி அணி சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், குருணால் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.