தெவிநுவர இரட்டைக் கொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது!

மாத்தறை – தெவிநுவர பகுதியில் விஷ்ணு ஆலயத்துக்கு அருகில் உள்ள சிங்காசன வீதியில் இரண்டு நபர்களைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தர, தலல்ல தெற்கு பகதியில் வசிக்கும் 33 வயது நபரே நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரட்டைக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகளுக்கு உடந்தையாக இருந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.