தலதா தரிசனத்தை நீட்டிக்க முடியாது; வசதிகள் செய்து கொடுப்பது கடினம் – தியவடன நிலமே ஊடகங்களுக்கு தகவல்!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார அவர்கள், ஸ்ரீ தலதா தரிசனம் முன்பு திட்டமிட்டபடி 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, தலதா வழிபாட்டு நாட்களை நீட்டிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்றும் அவர் கூறினார்.
இந்த முறை தலதா வழிபாட்டிற்கு எதிர்பார்த்ததை விட அதிகமானோர் கண்டி நகருக்கு வருகை தந்துள்ளதாகவும், வழிபட வரும் பக்தர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து இடங்களும் நிரம்பி வழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தினசரி பக்தர்களின் வருகை காரணமாக தற்போது வழிபட போதுமான இடவசதி இல்லை என்றும், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இப்பகுதியில் தங்கியிருப்பதால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார வசதிகள் வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.