பஹல்காம் தாக்குதல் தாக்கம்: இந்தியாவின் அதிரடி பதில்கள் – பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை! லஷ்கர்-இ-தொய்பா தளபதி ல்தாஃப் லல்லி, சுட்டு கொலை!

பஹல்காம் சுற்றுலா தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததையடுத்து, இந்தியா பலத்த பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் சார்பில் தொடர்பில்லை எனக் கூறப்பட்டாலும், இந்திய அரசு சுடுசுடுப்பான முடிவுகளை எடுத்து வருகிறது.
அட்டாரி–வாகா எல்லை மூடப்பட்டு, பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசா முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் குடிமக்கள் உடனடியாக நாடு விலக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அல்தாஃப் லல்லி, ஜம்மு–காஷ்மீர் பந்திபோரா பகுதியில் நடந்த சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதில் மூன்று இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும், தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் தோக்கர் மற்றும் ஆசிஃப் ஷேக் ஆகியோரின் வீடுகள் பாதுகாப்புப் படையினரால் குண்டு வைத்து அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய கடற்படை அரபிக் கடலில், ‘ஐஎன்எஸ் சூரத்’ ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இது தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய முற்போக்கான ஏவுகணையாகும். இஸ்ரேலுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, 70 கிமீ இடைமறிப்பு திறனை கொண்டது.
இந்த சோதனை பாகிஸ்தான் தரப்பை பெரிதும் உலுக்கியுள்ளது எனவும், பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியாவின் திடமான நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆதரித்துள்ளன.
அத்துடன், ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, ஏற்கெனவே நடப்பில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை இந்தியா-பாக் எல்லைப் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.