மின்னல் தாக்கி வயோதிபர் பலி.

பொலனறுவை – அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெகுலுவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் மின்னல் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
அரலகங்வில,கெகுலுவெல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார் என்று அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் மற்றுமொரு நபருடன் இணைந்து வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் போது மின்னல் தாக்கிப் படுகாயமடைந்தார்.
அவர் உடனடியாகச் சிகிச்சைக்காக அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த வயோதிபரின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.