உள்ளூராட்சி சபைத் தேர்தல்: ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு.

வரும் மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் விடுமுறைக் காலம், தற்காலிக ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையாகக் கருதப்பட வேண்டும் எனவும், இது ஊழியர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு வெளியில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு தொழிலாளருக்கும் வாக்களிப்பதற்காக வழங்கப்படும் விடுமுறைக் காலம், அவரது பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விடுமுறை அறிக்கையில் வாக்களிப்பதற்காகக் கடமை நிலையத்தில் இருந்து தனது வாக்கெடுப்பு நிலையத்துக்குச் செல்ல வேண்டியுள்ள தூரத்தின் அளவு – வழங்க வேண்டிய ஆகக் குறைந்த விடுமுறைக் காலம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.மீ. 40 அல்லது அதற்குக் குறைவான தூரம் – அரை நாள் (1/2)
கி.மீ. 40 இற்கும் 100 இற்கும் இடைப்பட்ட தூரமெனில் – ஒரு நாள் (1)
கி.மீ. 100 இற்கும் 150 இற்கும் இடைப்பட்ட தூரமெனில் – 11/2 நாட்கள்
கி.மீ. 150 இற்கு அதிகமாயின் – 2 நாட்கள்

இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையில் விடுமுறைக்காலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.