புனித பிரான்சிஸ் போப் ஆண்டவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

புனித பிரான்சிஸ் போப் ஆண்டவரின் உடல் நேற்று (26) வத்திக்கானில் இறுதிச் சடங்குக்குப் பின்னர் சாந்தா மரியா மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. கர்தினால் ஜியோவன்னி பட்டிஸ்டா ரே நடத்திய இறுதிச் சடங்கில், போப் பிரான்சிஸ் “மனங்களையும் இதயங்களையும் தொட்டதாகவும்”, “சுவர்களை அல்ல, பாலங்களை கட்டுவதே அவரது விருப்பமாக இருந்தது, ” என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அரச குடும்பத்தின் சார்பில் இளவரசர் வில்லியம் உட்பட ஆயிரக்கணக்கான உலகத் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். ரோம் வீதிகளிலும் புனித பீட்டர் சதுக்கத்திலும் சுமார் 400,000 அளவு துக்கம் அனுஷ்டிப்பவர்கள் கூடியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.