தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: மைத்திரி நீதிமன்றில் சாட்சியம்!

2008 ஆம் ஆண்டில் கொழும்பு பொரலஸ்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் முதலாவது சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை ஆஜராகி சாட்சியளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யும் நோக்கத்தில் 2008 ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட்து.
இந்த வழக்கின் முதலாவது சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.