காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் தடை!

63 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை இந்தியாவில் தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று (28) முதல் அமலுக்கு வரும் வகையில் இந்திய உள்துறை அமைச்சகத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீரின் பெஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தூண்டிவிடும் மற்றும் இனரீதியான பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிடுவதாகக் குற்றம் சாட்டி அந்த சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் யூடியூப் சேனல்களில் செய்தி சேனல்கள் மற்றும் சில பாகிஸ்தான் ஊடகவியலாளர்களின் சேனல்களும் அடங்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.