பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்.

2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் பத்ம பூஷன் விருது நடிகரும், விளையாட்டு வீரருமான அஜித்குமாரருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம், பத்மஸ்ரீ, பத்ம பூஷன், உள்ளிட்ட உயரிய விருதுகள் பல்வேறு பிரபலங்களுக்கு அறிவிக்க்பபட்ட நிலையில், இந்த விருதுகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் வழங்கப்பட்டது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்மபூஷன், பத்மஸ்ரீ, உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். சமூகத்தில், பொது சேவை மற்றும் குறிப்பிடத்தக்க, சாதனைகளை படைத்து வரும், நபர்களுக:கு இந்த விருதுககள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது நடிகரும், விளையாட்டு வீரருமான அஜித்குமாரருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

நடன கலைஞரும் நடிகையுமான, ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், கலைத்துறையில் குருவாயூர் துரை, சமையல் கலைஞர். செப் தாமோதரன், பத்திரிக்கையாளர் லட்சுமிபதி ராமசுப்பையர், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்பா சம்பந்தம், கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நடிகர் அஜித்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள், நெட்டிசன்கள், அரசியல் தலைவர்கள், சக நடிகர்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

https://x.com/ThalaAjith_FC/status/1916836991104061584?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1916836991104061584%7Ctwgr%5Ee909047051080d9f3f14266600dda4c06a1cf826%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.indianexpress.com%2Fentertainment%2Ftamil-cinema-actor-ajith-buy-padma-bhushan-award-video-viral-9011884

Leave A Reply

Your email address will not be published.