காலிமுகத்திடலில் அரசியல் நிகழ்வு! – அநுர அரசுக்கு எதிராக ரணில் கடும் விமர்சனம்.

கொழும்பு, காலிமுகத்திடலை அரசியல் நிகழ்வுக்குப் பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசு அந்த வாக்குறுதியை மீறியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும் கிடையாது. ஓரிரு விளக்கமளிக்கும் கூட்டங்களில்தான் பங்கேற்று வருகின்றேன். அப்படியிருந்தம் ஊர் முழுதும் என்னைத்தான் ஆளுங்கட்சியினர் திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரைப் பாராட்டுகின்றனர். இப்படியொரு தேர்தலை நான் கண்டதில்லை.
அதேபோல், மே முதலாம் திகதியன்று காலிமுகத்திடலில் பேரணியை நடத்துவதற்கு அநுர அரசு தீர்மானித்துள்ளது. காலிமுகத்திடலில் தேர்தல் பரப்புரைகளையோ அல்லது அரசியல் நிகழ்வுகளையோ நடத்துவதில்லை என்று கட்சிகள் அனைத்தும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அரசின் இந்த நடவடிக்கை தவறானது.” – என்றார்.