மட்டக்களப்பில் புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென மரணம்!

அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
2ஆம் குறுக்குத்தெரு, திருச்செந்தூர், கல்லடி, மட்டக்களப்பைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை ரவீந்திரன் (வயது 52) எனும் ஆசிரியரே திடீரென மயக்கமுற்று மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஆனைப்பந்தி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவானின் உத்தரவுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.