நவம்பரில் இருந்து இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி
பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சின் மேற்பார்வையில் பயோலஜிக்கல் ரிசேர்ச் மருந்துகளை தயாரிக்கும் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி நவம்பர் 1 முதல் மருத்துவ பரிசோதனைகளை நடத்தும் போதே இஸ்ரேலியர்களுக்கு வழங்கப்படும் என இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பயோலஜிக்கல் ரிசேர்ச் இஸ்ரேலில் ஒரு முன்னணி மருந்து நிறுவனம். 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 958 ஆரோக்கியமான மக்கள் தடுப்பூசிக்கு முன்வருவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
பயோலஜிக்கல் ரிசேர்ச் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் புதிய தடுப்பூசி ‘பிரிலைஃப்’ என்று அழைக்கப்படுகிறது.
ஜெருசலேம் (ராய்ட்டர்ஸ்)