மஹிந்தவைச் சந்திக்காமல் கிளம்பினார் பொம்பியோ!
மஹிந்தவைச் சந்திக்காமல்
கிளம்பினார் பொம்பியோ!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நாட்டில் இருந்து இன்று பிற்பகல் வெளியேறியுள்ளார்.
மைக் பொம்பியோ நேற்றிரவு இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டிலும் கலந்துகொண்ட அவர், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கும் விஜயம் செய்தார்.
இந்தநிலையில், அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.06 மணியளவில் விசேட விமானத்தின் ஊடாக மாலைதீவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மைக் பொம்பியோ, இலங்கை விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், மஹிந்தவுடனான சந்திப்பை இரத்துச் செய்துவிட்டு அவர் மாலைதீவு கிளம்பியுள்ளார்.