மட்டக்குளி ‘சமிட்புர’ அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் தனிமைப்படுத்தப்பட்டது
மட்டக்குளி ‘சமிட்புர’ அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் தனிமைப்படுத்தப்பட்டது
கொழும்பு மாவட்டத்தில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதால் ‘மட்டக்குளி ‘சமிட்புர” அடுக்குமாடி வளாகத்தை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சுமார் 6,000 மக்கள் வசிக்கும் வீடமைப்பு வளாகத்தை தனிமைப்படுத்த இலங்கை காவல்துறையும் சிறப்பு பாதுகாப்பு படையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர், மேலும் காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக இப்பகுதியில் ரோந்து சென்று வருகின்றனர்.