யாழ்ப்பாணம் குருநகரில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை.

யாழ்ப்பாணம் -குருநகரில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் குருநகர் பகுதியில் இருவருக்கு covid 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியவர்களுக்கு இன்று PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானோர் கடமையாற்றிய நிறுவன ஊழியர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவரி குடும்பத்தினர் மேலும் குருநகர் பாசையூர் சந்தைப்பகுதியில் எழுமாற்றாகதெரிவுசெய்யப்பட்ட மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சுகாதார தொழிலாளிகள் 7 பேர் உட்பட இன்றையதினம் 38 பேருக்கு PCRபரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.