தேசிய மரநடுகை திட்டம் முல்லைத்தீவில் முன்னெடுப்பு.
தேசிய மரநடுகை திட்டம் முல்லைத்தீவில் முன்னெடுப்பு
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிருளிய தேசிய மரநடுகை திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று(28) கரைதுறைப்பற்றுபிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சின்னாறு பொழுதுபோக்கு பூங்காவில் காலை 09.00மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த பொழுதுபோக்கு பூங்காவின் நடைபாதை மற்றும் கல்லாசன இருக்கைகளை சூழவுள்ள பகுதிகளில் நிழல்தரு மரங்கள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ்அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்குபற்றுதலுடன் இந் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளர் மற்றும் தவிசாளர், வனவளதிணைக்களத்தின் மாவட்ட அதிகாரி மற்றும் பிரதி மாவட்ட அதிகாரி, பிரதேச வனவளதிணைக்கள அதிகாரி, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.