முதிரை மர குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்பு : யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கைது
சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட10 லட்சம் ரூபா பெறுமதியான முதிரை மர குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்பு – யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கைது
சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட10 லட்சம் ரூபா பெறுமதியான முதிரை
மர குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்டுள்ளது. நேற்றையதினம்
செவ்வாய்க்கிழமை ஜெயபுரம் காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சூட்சுமமாக
முதிரை மரக்குற்றிகளை ஏற்றியவாறு ரிப்பர் வாகனம் பயணிப்பது தொடர்பில்
பொலிசார் மேற்கொண்ட சோதனையின்புாது குறித்த மரக்குற்றிகள்
மீட்கப்பட்டுள்ளது.
குறித் விடயம் தொடர்பில் பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்க கிடைத்த
இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த வாகனம் பொலிசாரால் விசேட
சோதனைக்குகட்படுத்தப்பட்டது. இதன்போது மரக்குற்றிகளை கற்களால் மறைத்து
சூட்சுமமான முறையில் கடத்த முற்றப்பட்டுளு்ளமை தெரிய வந்தது.
குறித்த மரக்கடத்தல் சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 35
வயதுடைய ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த ரிப்பர்
வாகனமும் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட முதிரை மரக்குற்றிகளின் பெறுமதி 10 லட்சம் மதிக்க தக்கது
எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் நீதிமன்றி சந்தேக
நபரிற்கெதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிார் முன்னெடுத்த வருகின்றனர்.
அண்மை நாட்களாக கிளிநொச்சி, பூநகரி, வவுனியா, மன்னார் பகுதிகளில் சட்ட
விரோத மரக்கடத்தல்கள் தொடர்பான விசேட சோதனை நடவடி்கைகளின் ஊடாக
பெறுமதிவாய்ந்த மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்கப்பட்டு வருகின்றமையும்
குறிப்பிடத்தக்கதாகும்.