வீட்டு தோட்ட செய்கையை விரிவுபடுத்தும் செயற்திட்டம்.
ஜனாதிபதியின் செளபாக்கியா வேளைத்திட்டத்தின் கீழ் மனை பொருளாதாரத்தை மேம்படுத்தும் நிகழ்சித்திட்டத்தின் ஊடாக கிராமங்களில் வீட்டு தோட்ட செய்கையை விரிவுபடுத்தும் செயற்திட்டம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேச செயலாளர் திரு.ம.பிரதீப் தலைமையில் இன்று மதியம் தாழ்வுபாடு கிராம அலுவலர் அலுவலகத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கோரோனா அச்சுறுத்தல் இருப்பினும் மக்கள் வீட்டி இருந்தவாரே வீட்டுத்தோட்டங்களை மேற்கொண்டு ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்து பலன் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட குறித்த செய்ற்திட்டத்தின் முதல் கட்டமாக தாழ்வுபாடு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 100 ஒரு குடும்பங்களுக்கு மேற்படி பயன் தரும் தாவரங்கள் மற்றும் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.குணபாலன் மன்னார் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.றொகான் மன்னார் மாவட்ட சமூர்த்தி முகாமையாளர் திரு.அலிஹார் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்ததுடன் மரக்கன்று நடுகையும் செய்து வைத்தனர் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்ட பயணாளர்களின் வீட்டு தோட்ட செயற்பாடுகளை சமூர்த்தி மற்றும் கிராம சேவையாளர்களூடாக கண்காணித்து அவர்களுக்கான மேலதிக ஊக்குவிப்புக்களும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.