திருக்கோவில் பிரதேசத்தில் சகல நிகழ்வுகளுக்கும் தடை
திருக்கோவில் பொலிஸ் பிரிவில் திருமண நிகழ்வுகள் , களியாட்ட நிகழ்வுகள், மத வழிபாட்டு நிகழ்வுகள், ஒன்று கூடல் போன்ற நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரை நிறுத்துமாறு பொது மக்களிடம் திருக்கோவில் கொரோனா தடுப்பு பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .
– Sathasivam Nirojan