தேவாலயத்திற்கு அருகே நடத்தப்பட்ட கத்திக்குத்து. மூவர் பலி.

பிரான்ஸில் தாக்குதல்: மூன்று பேர் உயிரிழப்பு- பலர் காயம்!
தெற்கு பிரான்ஸ் நகரமான நைஸில் ஒரு தேவாலயத்திற்கு அருகே நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி இந்த சம்பவத்தை ‘பயங்கரவாத செயல்’ என்று கூறியுள்ளார்.
மேலும், மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி ‘கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நகரின் நோட்ரே டேம் தேவாலயத்தில் அல்லது அதற்கு அருகில் நடந்ததாகவும், தாக்குதல் நடத்தியவரை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதாகவும் மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தாக்குதலுக்குப் பின்னர் மூன்று பேர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் ஒரு பெண்ணின் தொண்டை வெட்டப்பட்டதாகவும், சந்தேக நபர் ‘அல்லாஹு அக்பர்’ (கடவுள் மிகப் பெரியவர்) என்று கத்தியவாறு தாக்குதல் நடத்தியதாகவும் மேயர் மேலும் குறிப்பிட்டார்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தேவாலய பராமரிப்பாளர் என்றும் தாக்குதலின் போது வழிபாட்டாளர்கள் கட்டடத்திற்குள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் இத்தாக்குதல் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த இடத்தில் பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் இருப்பதாக பிரான்ஸ் உட்துறை அமைச்சகம் டுவிட்டரில் கூறியதுடன், இப்பகுதியைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தியது.