காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண் பலி.

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹலகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கஹட்டகஸ்திகிலிய – மீமின்னாவல, இஹலகம பகுதியைச் சேர்ந்த சுத்தாகே விமலாவத்தி (வயது 64) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுக்கு அருகில் சத்தம் கேட்டதையடுத்து கதவைத் திறந்து வெளியே செல்ல முற்பட்டபோது முன்னால் நின்ற யானை தூக்கி வீசியது எனவும், அவ்விடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.