சாய்ந்தமருதில் வெள்ள அபாயம்; மேயர் களத்தில்..!

கடந்த சில மணி நேரமாக பெய்து வருகின்ற பெரு மழையினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் தோணாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அபாயத்தையடுத்து, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் துரிதமாக செயற்பட்டு, அவரது நேரடி கண்காணிப்பில் முகத்துவாரம் தோண்டப்பட்டு, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இடி, மின்னலுடன் கொட்டும் மழைக்கு மத்தியில் மாநகர முதல்வருடன் மாநகர சபை உறுப்பினர்களான எம்.வை.ஜெளபர், முஹர்ரம் பஸ்மீர், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே.காலிதீன் உட்பட ஊழியர்கள் பலரும் ஸ்தலத்தில் நின்று துரித நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்கின்றனர்.
இத்துரித நடவடிக்கைகளினால் இப்பகுதிகளில் பாரிய வெள்ள அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.