யாழ் நெல்லியடி பகுதியில் தொற்று நீக்கம்.

நெல்லியடி நகரில் தொற்று நீக்கம்
கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பல பகுதிகளில் கொவிட் -19 தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெல்லியடி பஸ் தரிப்பு நிலையம், கடைகள், நெல்லியடி மத்திய சந்தை, நெல்லியடி திக்கம் வீதி, நெல்லியடி கொடிகாமம் வீதி போன்ற நெல்லியடி நகரை அண்டிய பகுதிகளில் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளைய தினம் ஏனைய இடங்களுக்கும் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.