இன்றும் 239 பேருக்கு கொரோனாத் தொற்று

இலங்கையில் இன்றும் 239 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமூகத்தில் இருந்தவர்களும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களுக்குமே இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 663 ஆக உயர்வடைந்துள்ளது. வைத்தியசாலைகளில் தற்போது 6 ஆயிரத்து 244 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேவேளை, 20 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.