முல்லைத்தீவில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு.
முல்லைத்தீவில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொவிட் -19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையை துரிதப்படுத்தும் முகமாக அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக மத்திய வங்கியின் நிதி உதவியில் மத்திய சுகாதார அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 16 பொதுச் சுகாதார பரிசோதகர்களிற்கு மோட்டார் சைக்கிள்களை கையளிக்கும் நிகழ்வு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நேற்று(31) இடம்பெற்றது.
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலான பணியினை நல்கிவரும் பொதுச் சுகாதார பரிசோதர்களின் வினைத்திறனான சேவையினை பெறும் நோக்கில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் மத்திய சுகாதார அமைச்சினால் மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.காண்டீபன், சுகாதார வைத்திய அதிகாரி வே.சிறீராம், சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர், மற்றும் மத்திய சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களை பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் கையளித்தனர்.