அம்பாறை மாவட்டத்திற்கு வருபவர்கள் பதிவு செய்ய கோரிக்கை.
அம்பாறை மாவட்டத்திற்கு வருபவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் பதிவு செய்ய கோரிக்கை.
மேல் மாகாணத்திலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் உடனடியாக பிரதேச செயலகங்களிலும் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமும் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் பொலிஸார் மற்றும் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் கவனத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுள்ளார்.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் தொடர்பாக பொது மக்கள் தகவல் அறிந்தால் உடனடியாக சுகாதார பகுதியினருக்கு அறிவிக்குமாறு கேட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நக ரங்கள் தோறும் பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளினாலும் முன்னெடுத்து வருகின்றன
பொதுப் போக்குவரத்தில் பய ணிப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடை வெளியைப் பேணும் முகமாகவும் இவ் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று நோய் தொடர்பாக பிரதேச செயலகங்கள் தோறும் உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக பொது மக்கள் விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டம் சிறந்த முறையில் முன்னொ டுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
பஸ் நிலையங்கள் மற்றும் வீதி களில் கூடி நிற்பதை தவிர்க்குமாறும், அனாவசியமான போக்குவரத்தில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.