வியன்னா தாக்குதல் ISIS தாக்குதலாக கருதப்படுகிறது
வியன்னா நகர குண்டுவெடிப்பில் , மூன்று பேர் கொல்லப்பட்டு , 15 பேர் காயமடைந்தனர் என்று வியன்னா போலீசார் தெரிவித்தனர்.
தாக்குதலின் போது இரண்டு ஆண்களும் , ஒரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவரை போலீசார் பின்னர் சுட்டுக் கொன்றனர்.
இன்று காலை நடந்த செய்தி மாநாட்டில், உள்துறை அமைச்சர் கார்ல் நெஹ்மர், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தாக்குதல் தீவிரவாதி ஐ.எஸ்.ஐ.எஸ் சார்புடையவர் என்று தெரிவித்தார்.
சந்தேக நபர் ஒரு துப்பாக்கியை வைத்திருந்தார், மேலும் அவர் தன்னை தற்கொலை குண்டுதாரி எனக் காட்டிக் கொள்ள முற்பட்டார், ஆனால் அது போலியானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிறப்புப் படையினர் சந்தேக நபரின் வீட்டை பரிசோதனை செய்துள்ளனர்.