கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் விசேட யாக பூசை.
கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் வன்னி பிராந்திய சைவகுருமார் ஒன்றியமும் கிளிநொச்சி ஊடக அமையமும் இணைந்து விசேட யாக பூசை வழிபாட்டினை இன்றைய தினம் நடாத்தியிருந்தன.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.