புத்தளம் பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புத்தளத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புத்தளம் நகரின் உடையார் வீதி வெட்டுக்குளம் பகுதியில் வசித்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளதாக புத்தளம் பொது சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
இவரே புத்தளம் நகரில் முதலாவது கொரோனா தொற்றாளர் இவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர். பரிசோதனை செய்த போது தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபரின் குடும்ப அங்கத்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், புத்தளம் வெட்டுக்குளம் உடையார் வீதியில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.