டிப்பர் ஒன்று வீதியை விட்டுவிலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
பளை இத்தாவில் பகுதியில் டிப்பர் ஒன்று வீதியை விட்டுவிலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின் பக்க இணைப்பு (ஜொய்ண்ட்) உடைந்தமையினால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த வாகனம் வீதியைவிட்டு விலகி அருகிலுள்ள தண்டவாளத்தின் மீது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது வாகனத்திகன் எரிபொருள் தாங்கியில் உடைவு ஏற்பட்டு டீசல் வெளியேறியுள்ளது எனவும், இவ்விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இவ் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.