பைடென் ‘வெற்றியின் இடைவெளியை’ அதிகப்படுத்தி முன்னிலையில் …
பைடென் ‘வெற்றியின் இடைவெளியை’ 253-214 ஆக அதிகப்படுத்தி முன்னிலையில் …
இதற்கு சற்று முன்னர் விஸ்கான்சினின் இறுதி முடிவுகள் வெளியான நிலையில், பைடென் இன்னும் 248-214 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.
2016 ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் இலக்ரோல் கொலேஜ் மூலம் 232 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இந்நிலையிலிருந்து , பைடென் ஏற்கனவே இந்த அளவைத் தாண்டிவிட்டார், இது ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
பைடென் ஏற்கனவே அவருக்கு சவாலான மாநிலங்களான நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் மினசோட்டாவை வென்றுள்ளார், அங்கு கடந்த தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைந்தார். அதாவது, நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவின் வரலாற்று ரீதியாக ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும் இடங்களுக்கு மேலதிகமாக கிடைத்த வெற்றியாகும்.
இருப்பினும், இக் கட்டுரையை எழுதும் தற்போதைய நிலையில், Electoral Collegeல் பெரும்பான்மையைப் பெற பைடனுக்கு இன்னும் 17 இடங்கள் மட்டுமே தேவையாக உள்ளன.
இதனால், பைடென் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.
தற்போது, மிச்சிகன், ஜார்ஜியா, வட கரோலினா, நெவாடா, பென்சில்வேனியா மற்றும் அலாஸ்கா ஆகிய ஆறு மாநிலங்களின் வாக்கு முடிவுகள் மட்டுமே வரவிருக்கின்றன.