இதே நாளில் தமிழ்நாட்டில் பெரும் சகாப்தம் படைத்த படம் தளபதி.

29 ஆண்டுகள் 05.11.1991 தமிழகத்தில் FDFS அதிகாலையிலேயே திரையிடும் பழக்கத்தை முதன்முதலாக அதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடக்கும் பொழுதே ஆரம்பித்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் தளபதி படம்.
தமிழ் நாட்டில் PVT திரையரங்கில் முதல் நாள் முதற்காட்சி 4 மணிக்கு திரையிடப்பட்டது. அதற்கு மேலும் ஒரு புதிய சாதனையாக 2வது நாள் முதல் 7 வது நாள் வரை அதிகாலை 2 மணிக்கே திரையிடப்பட்டு பெரும் சகாப்தம் படைத்த படம் தளபதி.
2வது வாரம் அன்றைய அரசின் பயங்கர கெடுபிடிகளால் 6 மணிக்கு மேல் திரையிட்டார்கள்
தளபதி ஓடியோ கேஸட் வாங்க கடைகளில் முன் பணம் செலுத்தி டோக்கன் பெற்று அந்த கேசட்டை வாங்கி கொள்ள நள்ளிரவில் பெரிய வரிசை என அமர்க்களம் படுத்திய மாபெரும் வெற்றிப் படம் தான் தளபதி.